ப்ளாக்கர் தளம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அது நமது வலைப்பதிவுகளை மொபைல்களில் பார்க்க வசதியாக Mobile Template- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் தற்போது பன்னிரெண்டு மில்லியன் நபர்கள் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது(கொசுறு: அதில் நானும் ஒருவன்).
இதை மையப்படுத்தி வேர்ட்பிரஸ் தளம் ஆரம்பத்திலேயே மொபைல்களில் வலைப்பதிவுகளை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளம் தற்போது தான் (இன்று தான் என நினைக்கிறேன்) இந்த வசதியை அளித்துள்ளது.
இந்த வசதியை செயல் படுத்த,
Blogger Dashboard => Settings => Email & Mobile பக்கத்திற்கு செல்லுங்கள்.
அந்த பக்கத்தில் Show Mobile Template என்ற இடத்தில் Yes என்பதை க்ளிக் செய்யவும்.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
** Save செய்வதற்கு முன்னால், Mobile Preview என்பதை க்ளிக் செய்து மாதிரி பார்த்துக் கொள்ளலாம்.
இனி மொபைல்களில் உங்கள் ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.
இப்பொழுது மீண்டும் இந்த வசதி வந்துள்ளது.இதைப் பற்றிய ப்ளாக்கரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
New mobile templates for reading on the go
No comments:
Post a Comment